இலங்கையில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 7,73,000 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இருவருக்கு, மூன்று அல்லது நான்கு நாட்களின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, தடுப்பூசி பெற்றுக்கொண்ட தேரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த தேரருக்கு வலிப்பு நோய் காணப்பட்ட நிலையில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.
தேரருக்கு வலிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதிலும், அந்த வைத்தியசாலை நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளதாகவும், பின்னர் அவர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post