இலங்கையில் கொவிட் தொற்றினால் முதலாவது தாதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவர் உயிரிழந்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.
சத்திர சிகிச்சையொன்றிற்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையில் அவருக்கு கொவிட் தொற்று கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கண்டி போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post