கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை மன்னார் மற்றும் அம்பாறை – காத்தான்குடி பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடக்கம் செய்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டி அடங்கிய சுற்று நிரூபத்தை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நிலத்திலிருந்து நீர்மட்டம் மிகவும் குறைவாக காணப்படுகின்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இந்த உடல்களை அடக்கம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் 15 அடி வரை நிலத்திலிருந்து கீழே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27ம் திகதி வரை கொவிட் தொற்றினால் 464 பேர் உயிரிழந்திருந்ததுடன், அவர்களில் 120 பேர் முஸ்லிம் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post