நாட்டில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த கொழும்பு மாவட்டத்தில் , நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 40 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் குறைவடைந்தாலும், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post