COVID தடுப்பிற்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியொன்றை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
கிராம மக்களுடன் கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தடுப்பூசியை விரைவாகப் பெறுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.
மேலும், ஒரு தொகை தடுப்பூசியை இலவசமாகப் பெறவும் ஒரு தொகை தடுப்பூசியை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
Discussion about this post