Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதான சிறுமியை இணைய வழியாக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 4 இணையத்தளங்களையும் முடக்குமாறு நீதிமன்றம், தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, இந்த இணையத்தளங்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார். (TrueCeylon)
Discussion about this post