14 உயிர்களை காவுக்கொண்ட பதுளை – பசறை விபத்தினால், திரை மறைவில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை கவலை அளிக்கும் விடயமே.
பெனடிக் மற்றும் மெடோனா தம்பதிகளும் இந்த பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பெனடிக், சிகிச்சையொன்றிற்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு பயணித்துள்ளார்.
அவருடன், அவரது மனைவி மெடோனாவும் வருகைத் தந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பஸ் தரிப்பிடத்திற்கு வருகைத் தரும் சந்தர்ப்பத்தில், பஸ் புறப்பட்டு சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த இருவரும் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி, இடைநடுவில் பஸ்ஸை பிடித்துள்ளனர்.
இவ்வாறு பஸ்ஸில் ஏறிய பெனடிக் மற்றும் மெடோனா தம்பதிகளின் பயணம், 13ம் கட்டையுடன் நிறைவடைந்தது.
பெனடிக், இரும்பு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஒருவர்.
வறுமை கோட்டியின் கீழ் வாழும் இவர்களுக்கு, மூன்று பிள்ளைகள்.
இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகியோர் பெற்றோரே இவ்வாறு இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளனர்.
Discussion about this post