நாடு முழுவதும் தளர்த்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தற்போது முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு, இரவு 11 மணி முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துக்கொள்ளும் நோக்குடன் இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பொருட்கள், மருத்து வகைகளை கொள்வனவு செய்ய இதனூடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இன்றைய தினம் தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி இன்றைய தினம் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு பதிலாக வேறு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் வகையிலான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 7ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தொடரும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இன்றைய தினத்திற்கு பின்னர் எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அன்றைய தினமே இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ளது.
அதன்பின்னர், எதிர்வரும் மாதம் 4ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், அன்றைய தினமே இரவு 11 மணி மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
இவ்வாறு 4ம் திகதி அமல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 7ம் திகதி வரை அமலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post