இலங்கையில் டெல்டா வீரியம் கொண்ட வைரஸ் பரவி வருகின்ற பின்னணியில், நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல தமிழ் பத்திரிகையான தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டை நாளை (20) நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு முடக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமையவே, நாளைய தினம் முதல் நாட்டை முடக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், ஜனாதிபதி இந்த சந்திப்பை அவசரமாக நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இன்று கூட்டாக கோரிக்கை விடுத்திருந்த பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post