மஸ்கெலியா – குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றி;ல தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
20 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் இந்த தீ பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
இந்த தீ பரவலினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மஸ்கெலிய மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா – ராகலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியிருந்ததுடன், முழு குடியிருப்பும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post