பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறிய குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் சட்டத்தரணியான மஞ்சு ஸ்ரீ சந்திரசேனவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமையை, விமர்சித்து, நீதித்துறையை அவமதித்ததாக, சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடு செய்துள்ளதாக சந்திமால் ஜயசிங்கவின் சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன, நியூஸ் வயர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யூடியூப் சமூக காணொளி இணையத்தளத்தில், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி, நேர்காணல்களை நடத்தியமை குறித்தும், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீது மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post