சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 வயதான சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டு அரசாங்கம் 2,25,000 சிங்கப்பூர் டொலரை (32956198.07 இலங்கை ரூபா) வழங்கியுள்ளது.
கொவிட் தடுப்பூசியின் முதலாவது மருந்தளவை (டோஸ்) இந்த சிறுவன், கடந்த ஜுன் மாதம் 26ம் திகதி செலுத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறுவனுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு 6ஆவது நாள் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு, வீடு திரும்பிய நிலையில், சிறுவன் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதயத்தின் தசை வீங்கியதாகவும், இதயத்துடிப்பு நின்றதாகவும் அந்த நாட்டு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உடற்பயிற்சிகளில் போது, அதிக எடையை தூக்கியமை, மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர், இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டமையினால், அந்த நாட்டு அரசாங்கம் சிறுவனுக்கு இந்த தொகையை வழங்கியுள்ளது.
Discussion about this post