கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 20 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
அம்பதலையிலிருந்து கொலன்னாவை வரையான நீர் விநியோக குழாயின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை நகர சபை பிரதேசம், இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகமே தடைப்படவுள்ளது. (TrueCeylon)
Discussion about this post