கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
படல்கும்புர பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
51 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post