கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பான திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம், இந்தியாவின் அதானி நிறுழனத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவிக்கின்றது.
புதுடில்லியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அநுரக் ஶ்ரீ வாஸ்தவ இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளியிட்ட கருத்து உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பில் அதானி நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post