கொழும்பு − டாம் வீதி பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கிடைத்த தகவலை அடுத்து, தமது தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர், ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
தமது 5 தீயணைப்பு வானங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post