கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பான பல்வேறு தகவல்களை பொலிஸார் விசாரணைகளின் ஊடாக கண்டறிந்துள்ளனர்.
ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திலிருந்து கொழும்பு − புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே இந்த சடலத்தை கொண்டுவந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்தில் பஸ் ஒன்றில் ஏறி, சாரதிக்கு அருகாமையிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து சடலத்தை கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் இறங்கும் சந்தேகநபர், சடலத்துடனான பயணப் பையை டாம் வீதிக்கு அருகில் கொண்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே, தலை துண்டிக்கப்பட்ட சடலத்தை, டாம் வீதியில் கைவிட்டு, சந்தேகநபர் அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் டாம் வீதி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (TrueCeylon)
முழுமையான செய்தியை அறிய கீழே கிளிக் செய்யவும்
Discussion about this post