உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை காணப்படுவதாக கொவிட் தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையத்தள தரவுகள் குறிப்பிடுகின்றன.
90,027 தொற்றாளர்களுடன் சீனா 86வது இடத்திலும், 86,989 தொற்றாளர்களுடன் இலங்கை 87வது இடத்திலும் உள்ளன.
கொவிட் தொற்று முதல் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனா, அந்த தொற்றிலிருந்து பெருமளவு விடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொவிட் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, இலங்கையில் 520 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக அமெரிக்காவே அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, துருக்கி, ஜேர்மனி ஆகிய பாதிப்புக்களை அதிகளவில் எதிர்நோக்கியுள்ளன. (TrueCeylon)
Discussion about this post