சீனாவில் தனது மகன் திருமணம் செய்யும் பெண் தனது உண்மையான மகள் என்பதை திருமணத்தின் போது தாய் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஜியன்சு மாகாணத்தின் சுசோ நகரில் கடந்த மார்ச் 31ஆம் திகதி இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் வீதி ஓரத்தில் அந்தத் தாய் தனது மகளை தொலைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக குழந்தையை தேடியபோதும் இரண்டு தசாப்தங்களின் பின் எதிர்பாராத தருணத்தில் மகள் கிடைத்திருப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன் திருமணம் புரியும் பெண்ணின் கையில் இருக்கும் மச்சம் காணாமல்போன தனது குழந்தையிடம் இருப்பது போன்று உள்ளதை கண்டே அந்தத் தாய் அது பற்றி கேட்டுள்ளார்.
அப்போதே அந்தப் பெண்ணை வீதி ஓரத்தில் இருந்து எடுத்து வளர்த்ததை அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
சொந்தப் பெற்றோரை அடைந்ததில், திருமணத்தைக் காட்டிலும் அதிக ஆனந்தம் அடைவதாகக் கூறி மகிழ்கிறார் மணமகள்.
அந்தப் பெண் மணந்துகொண்ட ஆடவர், தாயாரின் தத்தெடுக்கப்பட்ட மகன் என்பதால் அவர்களது உறவுமுறை குறித்த குழப்பமும் நீங்கியது.
Discussion about this post