களுத்துறை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு, கொவிட் தொற்றாளர்களை சிகிச்சைகளுக்காக அனுப்பும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை அவதானித்து, எதிர்வரும் தினங்களில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, நோய் அறிகுறிகள் தென்படாத 60 வயதுக்கு அதிகமானோரை கட்டாயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி கூறினார்.
அத்துடன், சிறு நோய் அறிகுறிகள் தென்படுகின்ற கொவிட் தொற்றாளர்களை இடைநிலை மத்திய நிலையங்களில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு ஏற்ற சூழல் அமையுமாக இருந்தால், அவர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி கூறுகின்றார்.
Discussion about this post