இந்தியாவினால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே, பெற்றோலிய கூட்டுதாபனம் தமது எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், சிபேட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.
IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ற வகையில் சிபேட்கோ நிறுவனத்தின் எரிபொருளின் விலைகளையும் அதிகரிக்குமாறு இந்தியாவினால், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது
இந்தியாவினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு, இரண்டு தினங்களிலேயே, அதற்கு ஏற்ற வகையில் சிபேட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.
IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், IOC நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பெருமளவிலானோர் சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே கடந்த இரு தினங்களாக எரிபொருள் நிரப்பி வந்ததை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான நிலையிலேயே, தற்போது சிபேட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. (TrueCeylon)