வெவ்வேறு கொவிட் தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்துவது தொடர்பில் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரண்டு விதமான கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இரண்டு விதமான தடுப்பூசிகளை ஒருவருக்கு வழங்க முடியுமா என்பது தொடர்பில் தற்போது உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி, சில தரவுகளை சர்வதேச நாடுகள் சேகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், ஓளடதங்கள் அதிகார சபை மற்றும் தொற்று நோய் ஆய்வு பிரிவு ஆகியன இணைந்தே, ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இரண்டு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்துது சரியானது என்ற நிலைப்பாட்டிற்கு வரும் வரை, எந்த வித பரிந்துரைகளையும் முன்வைக்க முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது என தான் மீண்டும் தெரிவித்துக் கொள்வதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post