வேறு நாடுகளிலுள்ள நபர்களை இலங்கையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டவர்களை இலங்கையில் தனிமைப்படுத்தும், வர்த்தக நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.
Discussion about this post