வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட அறிக்கையொன்று காரணமாக, பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் ட்ரூ சிலோனுக்கு கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தான் கனடா நோக்கி பயணித்த சந்தர்ப்பத்தில், ஜப்பான் நாட்டில் பிடிப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதனைத் தொடர்ந்து, தான் ஜப்பான் நாட்டில் அகதி அந்தஸ்த்தை கோரி, ஜப்பான் நாட்டிலேயே தொழில் செய்து வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஷ்வரன், நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றமையினால், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களை மீண்டும் நாட்டிற்கு வருகைத் தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை அடிப்படையாக வைத்து, ஜப்பான் நாட்டு அரசாங்கம் தம்மை அங்கிருந்து வெளியேற்றியதாக அவர் கவலையுடன் கூறினார்.
தான் ஜப்பானிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு, சி.வி.விக்னேஷ்வரனினால் வெளியிடப்பட்ட அறிக்கையே காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
தான் இன்று பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தானும், தனது குடும்பமும் இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதற்கு, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என குறித்த நபர் கவலையுடன் ட்ரூ சிலோனுக்கு குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post