கொழும்பு – ஒருகொடவத்தை பகுதியில் சொகுசு பஸ் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 அளவில் நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு சமிக்ஞையை விளக்கை கருத்திற் கொள்ளாது, சாரதி, பஸ்ஸை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேரும் தருணத்தில், பஸ்ஸில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒருகொடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post