வாரத்திற்கு ஒரு தடவையாவது அல்லது பூரணை தினத்திலாவது பௌத்தர்கள் விஹாரைக்கு செல்வது கட்டாயமாக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
புத்தளம் – மாதம்பை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, மாணவர்களை கட்டாயம் அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய சமயங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சரியான முறையில் இடம்பெற்று வருவதாக கூறிய அவர், ஏனைய மதத்தவர்கள் உரிய தினத்தில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பௌத்தர்கள் அவ்வாறு உரிய தினங்களில் விஹாரைகளுக்கு செல்வது கிடையாது என பிரதமர் கூறுகின்றார்.
இளைஞர், யுவதிகள் சமய நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாது இருப்பது, பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post