பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 17ஆம் திகதி நபர்களைத் தாக்கியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜகத் சமந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு குழுவை தாக்கியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது, இது அவரை கைது செய்ய வழிவகுத்தது.