வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகளை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த தருணத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (TrueCeylon)