பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு சம்பள நிர்ணய சபை, மேலதிக வாக்குகளினால் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்;த்தைகளின் இணக்கப்பாடு எட்டப்படாத பின்னணியில், சம்பள நிர்ணய சபைக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் பலரும் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் வழங்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 11 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post