மூன்றாம் இணைப்பு
வத்தளை − ஹேக்கித்த ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் செந்தில் தொண்டமான் ஆராய்ந்துள்ளார்.
ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமால், இந்து சமய விவகார திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
வத்தளை – ஹேக்கித்த ஆலயத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறியவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
முதலாம் இணைப்பு
வத்தளை − ஹேக்கித்த ஆலயத்தில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர் வருகைத் தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. (TrueCeylon)
Discussion about this post