முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமானார்.
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த சில தினங்களாக IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தனது 80வது வயதில் காலமானார்.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தின் 18வது சபாநாயகராக அவர் கடமையாற்றியிருந்தார்.
1941ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஹப்புத்தளை பகுதியில் அவர் பிறந்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற பிரவேசத்தை 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், சப்ரகமுவ மாகாண ஆளுநர், சபாநாயகர் என பல்வேறு பதவிகளை டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார வகித்துள்ளார்.
இந்த நிலையில், கொவிட் தொற்றுக்குள்ளான டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார, இன்று தனது 80வது வயதில் காலமானார். (TrueCeylon)
Discussion about this post