திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றி வந்த MV EUROSON கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
குறித்த பகுதிக்கு கடற்படையின் 2 படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகின்றது.
அபுதாபியிலிருந்து திருகோணமலை வந்த கப்பலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை − இராவணா கோட்டை பகுதியில் பாறைத் தட்டியுள்ளது.
இதன்போது, கப்பலில் 18 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post