திருகோணமலை எரிப்பொருள் தாங்கிகளை மீள இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட தகவலை, இந்தியா நிராகரித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
உடன்படிக்கையின் பிரகாரம் திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் தற்போது இந்தியா வசம் காணப்படுகின்றன.
இந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகருடன் நடத்திய சந்திப்பில், திருகோணமலை எரிப்பொருள் தாங்கிகளை மீள இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக உதய கம்மன்பில நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா, இலங்கையின் கருத்தை நிராகரித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post