பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரச பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.