இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான 56 வயதுடைய போரிஸ் ஜான்சன் தனது காதலியான 33 வயதுடைய ஹேரி சைமண்ட்ஸ் உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அவர்கள் ஜூலை மாதம் திருமணம் செய்ய உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் தற்போது லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பதுடன் கேரி சைமண்ட்ஸூக்கு இது முதல் திருமணமாகும்.
Discussion about this post