பொகவந்தலாவை – போபத்தலாவ வனப் பகுதிக்கு காணாமல் போன இளைஞரை தேடும், பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கடந்த மூன்று நாட்களாக இந்த தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், குறித்த இளைஞன் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
விறகு வெட்டுவதற்காக வனப் பகுதிக்குள் சென்ற இளைஞனே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொகவந்தலாவை – லின்ஸ்டட் பகுதியைச் சேர்ந்த 26 வயதான திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
கடந்த 9ம் திகதி விறகு வெட்டுவதற்காக போபத்தலாவ வனப் பகுதிக்குள் சென்ற இளைஞன், இன்று வரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் விறகு வெட்டுவதற்காக வனப் பகுதிக்குள் நாளாந்தம் செல்லும் ஒருவர் எனவும், அவரது கையடக்கத் தொலைபேசி தற்போது செயலிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிலுள்ள மோர்ப்ப நாய்களின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)
Discussion about this post