முடக்கப்பட்டுள்ள பொகவந்தலாவ − செபல்டன் பெருந்தோட்ட பகுதியின் P.S. பிரிவில் வசிக்கும் 400 பேர் PCR பரிசோதனைகளுக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த 400 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
78 வயதான ஒருவர் கொவிட் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த பகுதியில் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பொகவந்தலாவை பகுதியில் இதுவரை 100க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post