கொழும்பு – பம்பலபிட்டிய கடலில் படகொன்று கவிழ்ந்துள்ளது.
இந்த படகு இன்று (08) பிற்பகல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் இரண்டு மீனவர்கள் பயணித்துள்ளதாக பம்பலபிட்டிய பொலிஸார்
ட்ரு சிலோனுக்கு தெரிவித்தனர்.
இவ்வாறு படகில் பயணித்த ஒருவர், நீந்தி கரைக்கு வருகைத் தந்துள்ளார்.
மற்றுமொருவர் விபத்துக்குள்ளான படகில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், படகிலுள்ள மீனவரை காப்பாற்ற கடற்படையினர் விரைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post