இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களதேஷ் அணி டக்வத் ஓவிஸ் முறை படி 103 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
Discussion about this post