ராகம ரணவிரு செவனே நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஊனமுற்ற இராணுவ வீரரைத் தாக்கி, அவருக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக பண்டாரகம பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பானந்துறை மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய இன்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஊனமுற்ற வீரர் தனது சகோதரருடன் 15 ஆம் திகதி இரவு பண்டாரவளையில் ரைகம் பகுதியில் உள்ள வீதியில் இருந்த போது குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து தாக்குதல் மேற்கொண்டதாக பண்டாரகம பிரதேசசபை உறுப்பினர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த ஊனமுற்ற வீரர் தற்போது பானந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Discussion about this post