பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலையின் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் காலி நகர் பகுதியில் 12 கொவிட் தொற்றாளர்களும், ஹபராதுவையில் 15 பேரும், எல்பிடியவில் 11 பேரும், இமதுவ மற்றும் நியாகம ஆகிய பிரதேசங்களில் 10 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
Discussion about this post