இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி, கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள இலங்கை வங்கி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (TrueCeylon)