பதுளை நகரில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இந்த மரம் இன்று பிற்பகல் முறிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பதுளை நகரிலுள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாரிய மரமொன்றை இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் இதனால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறிந்து வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (TrueCeylon)
Discussion about this post