பதுளை − பசறை பஸ் விபத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், டிபர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நேர்ந்ததை அடுத்து, யாருக்கும் எந்தவித தகவல்களையும் வழங்காது, டிபர் லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.
இதேவேளை, பசறை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். (TrueCeylon)
Discussion about this post