மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் இரண்டை ஆரம்பிப்பதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் 286 மெகா வோர்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 234 மெகா வோர்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)