2029ம் ஆண்டில் பூமியை கடக்கும் என கணிக்கப்பட்ட ‘அபோபிஸ்’ (Apophis) என்ற சிறுகோள் நேற்று இரவு பாதுகாப்பாக பூமியைக் கடந்ததாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அபோபிஸ்” என்பது எகிப்திய கடவுளின் பெயரை குறிப்பிடுகின்றது. அந்த வகையில் 2029ம் ஆண்டில் பூமிக்கு வருகின்றார் எகிப்த் கடவுள் அபோபிஸ்” என்று நாசா முன்னதாக அறிவித்திருந்தது.
நாசாவின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் சுமார் 1,000 அடி (300 மீட்டர்) விட்டம் கொண்டது மற்றும் 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப கணிப்புகள் 2029 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்குள் விழுந்துவிடும் என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.
எனினும், அப்போபிஸ் பூமியிலிருந்து 19,000 மைல் (31,000 கி.மீ) க்குள் சென்றது. சில செயற்கைக்கோள்களை விட நெருக்கமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, அப்போபிஸ் சந்திரனை விட 44 மடங்கு தொலைவில் இருந்தது.
எகிப்திய கடவுள் “அபோபிஸ்”…
எகிப்த்தில் ஏராளமான மர்மங்கள் புதைந்துள்ளன. எகிப்தியர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் இவைகள் மற்ற நாடுகளை காட்டிலும் வேறுபட்டது.
அவர்கள் சூரியன் உள்ளிட்ட பல்வேறு கடவுகள்களையும் வழங்கியுள்ளனர்.
அவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒருவராக எகிப்தின் கடவுளான அபோபிஸ் எனப்படும் கடவுள் இருக்கின்றார்.
(Apophis) ஒரு சர்பத்தைப் போல தோற்றமளிக்கின்றார். இதை அந்நாட்டு மக்கள் வழிபட்டு வந்தனர்.
எகிப்த் கடவுளான அபோபிஸ் பூமி அருகே வருகின்றார் என்று நாசா கூறியிருந்தது. அதுவும் 2029ம் ஆண்டில் வருவதாக நாசா உறுதி கூறியுள்ளது. மேலும், பூமிக்கு வருது உண்மையான கடவுள் அல்ல. இது சிறுகோள் ஆகும். என்றும் குறிப்பிட்டிருந்தது.
எகிப்தின் கடவுளான அபோபிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த சிறுகோள் 340 மீட்டர் நீளம் உடையதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள் வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மாலை நேரத்தில் பூமியை நெருக்கமாக கடந்து செல்ல வாய்ப்பிருப்தாக தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் குறித்த சிறுகோள் நேற்று இரவு பாதுகாப்பாக பூமியைக் கடந்ததாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post