அனுராதபுரத்தில் உள்ள சதொச பல்பொருள் அங்காடியில் மதுபான விற்பனை பிரிவிலிருந்து மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த சதொச அங்காடிக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த விற்பனையாளர்களை மிரட்டி ஒரு தொகை மதுபான போத்தல்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post