கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லேரியா மருத்துவமனையில் இருந்து கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார்.
இதில் தாய் அல்லது குழந்தையை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் முன்னதாகவே தெரிவித்தனர்.
44 வயதான குறித்த பெண் சில நாட்களுக்கு முன்பு மயக்க நிலையில் இருந்தபோது குழந்தையை பெற்றெடுத்தார்.
இது தொடர்பில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் நிபுணர்கள் கூறுகையில்,
அந்தப் பெண் சுமார் 11 நாட்கள் இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்றார். இருப்பினும், வைரஸ் காரணமாக அவரது மூளை வீங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள்.
Discussion about this post