இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,434ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
நாட்டில் நேற்றைய தினம் (16) 171 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் உயிரிழப்பு முதலில் பதிவான 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலம் வரை, நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பாக இது காணப்படுகின்றது என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post