குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு, இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் இதுவரை 520 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
Discussion about this post